2025 மே 19, திங்கட்கிழமை

அஜீத்தால் நிறைவேற்றப்பட்ட ஸ்ருதியின் ஆசை

George   / 2015 ஜூலை 13 , பி.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜீத்தின் கையால் புகைப்படம் எடுத்து தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்டுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன். அஜீத்தின் புகைப்பட ஆர்வம் பற்றியும் அண்மையில் அவர் அப்புக்குட்டியை புகைப்படம் எடுத்தது பற்றியும் அறிந்திருந்த ஸ்ருதிஹாசன், தன்னையும் புகைப்படம் எடுத்து தரும்படி கேட்டிருக்கிறார்.

இந்நிலையில், ஒரு நாள் படப்பிடிப்பு இடைவெளியில் ஸ்ருதியை விதவிதமாக புகைப்படம் எடுத்து கொடுத்து அசத்தி விட்டார் அஜீத். இந்த புகைப்படங்களை பொக்கிஷமாக பாதுகாப்பேன் என்று சந்தோஷத்தில் பொங்குகிறார் ஸ்ருதி ஹாசன்.
அஜீத் சிறந்த புகைப்பட கலைஞர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் தனது மனம் கவர்ந்தவர்களை அவர்கள் அறியாமல் புகைப்படம் எடுத்து அதை பிரேம் செய்து கொடுத்து அசத்துவார்.

தற்போது அஜீத்தின் 56ஆவது திரைப்படத்தை இயக்கும் வீரம் சிவா, படப்பிடிப்பு தளத்தில் உட்கார்ந்தபடியே குட்டித் தூக்கம் போடுவாராம். அஜீத் அதையும் புகைப்படம் எடுத்து அவரிடமே கொடுத்து அசத்தினார். 

தொடர்ந்து, கடந்த வாரம் நடிகர் அப்புகுட்டியை விதவிதமாக புகைப்படம் எடுத்து கொடுத்து ஒரே மாதிரி நடிக்காதீர்கள், விதவிதமா நடியுங்கள், பெயரையும் அப்புக்குட்டி என்பதை மாற்றி சொந்த பெயரான சிவபாலன் என்ற பெயரிலேயே நடியுங்கள் என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X