2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

த்ரிஷாவுக்கு குடை பிடித்த தல

George   / 2015 ஜூலை 17 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைப்பை பார்த்ததும் என்ன த்ரிஷாவுக்கு அஜீத் குடை பிடித்தாரா? என்று ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. ஆனால் அதுதான் உண்மை. இது இப்போது நடந்தது அல்ல, சில வருடங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. 

கீரிடம் திரைப்படத்தில் இடம்பெற்ற அக்கம் பக்கம் -என்ற பாடல் கேரளாவில் உள்ள ஒரு ஏரியில் படமாக்கப்பட்டதாம்.அப்போது, ஏரிக்குள் அஜீத்-த்ரிஷா இருவரும் ஒரு படகில் அமர்ந்தபடி அந்த பாடலில் நடித்துள்ளனர். 

ஏரிக்கு வெளியே நின்று கமரா பிரிவு அந்த காட்சியை படமாக்கியுள்ளனர். ஆனால், அப்போது ஒவ்வொரு காட்சி முடிந்ததும் ஏரிக்கு வெளியே நிற்கும் தனது உதவியாளரை ஏரிக்குள் வரவைத்து டச்சப் செய்து கொண்டதோடு, அடுத்த காட்சிக்கு கமரா பிரிவு தயாராகும்வரை  உதவியாளரை தனக்கு குடை பிடிக்க சொன்னாராம் த்ரிஷா. 

இதனால் அவர் ஒவ்வொரு காட்சி முடிந்ததும் ஏரிக்குள் செல்வதும், பின்னர் வெளியேறுவதுமாக இருந்திருக்கிறார். இதனால் அவர் சென்று வரும் ஒவ்வொரு நேரத்திற்காகவும் படக்குழுவினர் காத்திருந்து பின்னர் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இதைப்பார்த்துக்கொண்டிருந்த அஜீத், ஒருமுறை ஏரிக்கு வெளியே நின்ற உதவியாளரை த்ரிஷா அழைத்தபோது அவரிடமிருந்த குடை மற்றும் டச்சப் பொருட்களை வாங்கிக்கொண்டு அவரை அனுப்பிவிட்டு, தானே த்ரிஷாவுக்கு குடை பிடித்திருக்கிறார். 

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த த்ரிஷா, நீங்கள் எதற்காக குடை பிடிக்கிறீர்கள் என்று கேட்க, ஒவ்வொரு முறையும் உனது உதவியாளர் ஏரிக்குள் வந்து வந்து செல்ல வெகுநேரமாகிறது அதுவரை மொத்த படக்குழுவும்; வெளியில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அத்தனை பேரை காத்திருக்க வைக்க வேண்டாம் என்பதற்காத்தான் நானே குடை பிடிக்கிறேன். எனக்கு இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை என்றாராம்.

ஆனால், அஜீத் அப்படி தனக்கு குடை பிடித்ததை மற்றவர்கள் சுற்றி நின்று கோபத்துடன் பார்த்ததைக்கண்ட த்ரிஷா, எனக்கு நீங்கள் குடை பிடிக்க வேண்டாம் என்று சொல்லி அந்த குடையை ஏரிக்குள் தூக்கிப்போட்டு விட்டாராம். அதன்பிறகுதான் அஜீத்தையே குடை பிடிக்க வைத்து விட்டாரே என்று கோபத்துடன் த்ரிஷாவைப்பார்த்த அத்தனை முகங்களின் கோபமும் அடங்கியதாம்

என்னம்மா த்ரிஷா இப்டி பண்ணிட்டியேமா?

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X