2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாட்ஷாவாக மாறும் தல

George   / 2015 ஜூலை 19 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூப்பர் ஸ்டார் ரஜனியின் நடிப்பில் வெளிவந்து மிகப்பொரும் வெற்றிப்பெற்ற பாட்ஷா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் அஜீத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி வாழ்க்கையில் மட்டுமல்ல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கும் மறக்க முடியாத திரைப்படமான பாட்ஷாவின் தாக்கம் இன்றும் உள்ளது. எங்கு சென்றாலும் பாட்ஷா திரைப்படம் பற்றய கேள்வியை எதிர்கொள்ளாமல் இருக்க முடியவில்லை என சுரேஷ்கிருஷ்ணா அடிக்கடி கூறுவார். அந்த அளவுக்கு பாட்ஷா பேசப்பட்ட திரைப்படம்தான். அதனால்தான் அத்திரைப்படத்தின் அனுபவங்களை புத்தகமாகவே எழுதி இருக்கிறார்.  

இந்நிலையில் பாட்ஷாவின் இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்பிய சுரேஷ் கிருஷ்ணா, இது பற்றி ரஜினியிடம் கேட்ட போது ஒரு பாட்ஷாதான் இன்னொரு பாட்ஷாவை தன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்று மறுத்து விட்டாராம். 

ஆனால், பாட்ஷா-2 ன் கதையை உருவாக்கி செதுக்கி வைத்துள்ள இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா, ஏற்கொனவே அஜித், பில்லா-2 என்று ரஜினி நடித்த திரைப்படத்தின் தலைப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அஜித்திடம் கதையைச் சொல்லியுள்ளார். 

இந்த கதை அஜித்துக்குப் பிடித்துப் போயுள்ளதாகவும் விரைவில் இதன் அறிவிப்பு வரவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கற்ற மொத்த வித்தையையும்  பாட்ஷாவின் இரண்டாம் பாகத்தில் இறக்கிவைக்க தயாராகியுள்ளார் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X