2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ரோபோ சங்கரால் கடுப்பான தனுஷ்

George   / 2015 ஜூலை 21 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

திறமையாளர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை முன்னேற வைக்க வேண்டும் என்று நினைப்பவர் நடிகர் தனுஷ். அனிருத், சிவகார்த்திகேயன் ஆகியோரின் திறமையை அறிந்து தனது திரைப்படங்களில் அறிமுகம் செய்தார். தொடர்ந்தும் தனது திரைப்படங்களில் வாய்ப்பளித்து உதவிசெய்கிறார்.

அப்படிப்பட்ட அவரை சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ள கொமடி நடிகர் ரோபோ சங்கர் சீண்டியுள்ளார்.
சின்னத்திரையில் கொமெடி பண்ணும் ரோபோ சங்கரை மாரி திரைப்படத்தில்  கொமெடியனாக நடிக்க தனுஷ் வாய்ப்பளித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது.

மாரி திரைப்படம் வெளியான அடுத்த நாள் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் தன் நண்பர்களுடன் ஜொலியாகப் பேசிக்கொண்டிருந்த ரோபோ சங்கர்,, 'மாரி திரைப்படத்தில் நான்தான் ஹீரோ. கொமெடியனா தனுஷ் நடித்திருக்காப்புல. மாரி திரைப்படத்தில்  தனுஷூக்கு  நான்  நிறைய ஸ்பேஸ் குடுத்துருக்கேன்! நல்லா வருவாப்புல!!' எனறு கொமெண்ட் அடித்திருக்கிறார்.

இந்த கொமெண்ட்டை அப்படியே அலைபேசியில் பதிவு செய்து வாட்ஸ்அப்பில் தனுஷூக்கு யாரோ அனுப்பி வைத்துவிட்டனர். ரோபோ சங்கர் தன்னைப் பற்றி அடித்த கமெண்ட்டைக் கேட்ட தனுஷ் செம கடுப்பாகிவிட்டாரம்.

உதவி செய்த தனுஷூக்கு இநத நிலைமையா?

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X