Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஜூலை 21 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைய தளபதி விஜய் மற்றும் நடிகை அமலாபால் ஆகிய இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். ஆனால் அது திரைப்படத்தில் இல்லை. விளம்பரப்படத்தில் என தெரியவருகின்றது.
இயக்குநர் விஜய், மும்பையை மையமாக வைத்து இயக்கிய தலைவா திரைபடத்தில் நடிகர் விஜயுடன் அமலாபால் இணைந்து நடித்திருந்தார். இந்த திரைப்படத்துக்கு பிறகு அமலாபாலும், இயக்குநர் விஜய்யும் திருமணம் செய்துகொண்டதையடுத்து அமலாபால், திரைப்படங்களில் நடிக்காமல ஒதுங்கிவிட்டார்.
இந்நிலையில விஜய்யும் அமலாபாலும் தற்போது மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். பிரபல நகைக் கடையான ஜோஸ் ஆலுக்காஸின் விளம்பர தூதர் நடிகர் விஜய் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இக்கடையின் விளம்பரங்களில் இதுவரை விஜய் மட்டுமே நடித்து வந்தார்.
தற்போது எடுக்கப்பட்ட புதிய விளம்பரத்தில் விஜய்யும் அமலாபாலும் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடித்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்கள்; அனைத்து தொலைக்காட்சிகளிலும் எப்போது ஒளிப்பரப்பப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago