2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நான் ரஜினி ஜோடியா? ராதிகா ஆப்தே மறுப்பு

George   / 2015 ஜூலை 21 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தான் ஒப்பந்தமாகியுள்ளதாக வெளியான தகவலை நடிகை ராதிகா ஆப்தே மறுத்துள்ளார்.

மேலும் இது வெறும் வதந்தி மட்டுமே எனவும் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது தொடர்பில் தன்னிடம் யாரும் வந்து பேசவில்iலை என அவர் கூறியுள்ளார்.

அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ரஞ்சித், முதல்படம் வெற்றிப்படமாக அமையவே, அடுத்ததாக, கார்த்தி நடிப்பில், மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படமும் ரஞ்சித்துக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் தான், லிங்கா திரைப்படம் ஏற்படுத்திய தோல்வியின் காரணமாக, புதுமுக இயக்குநரின் திரைப்படத்தில் நடிப்பதன் மூலமே, தமிழ்த்திரையுலகில் மீண்டும் முன்னணி இடத்தை பிடிக்க முடியும் என்று நினைத்திருந்த ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியான நிலையில் ரஜினிகாந் ஜோடியாக, ராதிகா ஆப்தே நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே இந்த பட்டியில் பொலிவூட் நடிகைகளான தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டன.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில்; படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ள நிலையில் அதற்குள் இதுபோன்ற எத்தனை செய்திகள் வரவிருக்கின்றனவோ... 

ஏம்பா ரஞ்சித்! திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகை குறித்த அறிவிப்பை விரைவில் வெளிய சொல்லுங்கப்பு!

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X