Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஜூலை 21 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலவெறி என்ற ஒற்றை பாடல் மூலம் அதிரடியாக அறிமுகமாகி தொடர்ந்து மெகா ஹிட் பாடல்களை கொடுத்து விஜய், அஜித் என்று அட்டகாசமாக முன்னேறிவரும் இளம் இசையமைப்பாளரான அனிருத், சூப்பர்ஸ்டார் ரஜினியின் புதிய திரைப்படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றத்தில் உள்ளாராம்.
ரஜினியின் புதிய திரைப்படவாய்ப்பை கைப்பற்றி முதலிடத்துக்கு வந்துவிடவேண்டும் என்பதுதான் அனிருத்தின் நோக்கமாக இருந்து வந்தது. அதற்கான முயற்சியில் அவர் திரைக்குபின்னால் இறங்கினபோதும், ஏ.ஆர்.ரஹ்மானே அண்மைகாலமாக ரஜினி திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வந்ததால் ரஜனிக்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைக்கவில்லை.
இருந்தாலும், சரியான நேரத்துக்காக காத்துக்கொண்டிருந்தார் அனிருத். இந்த நேரத்தில்தான், லிங்கா கொடுத்த அதிர்ச்சி தோல்வி காரணமாக, ரஜினிக்கு பழைய கூட்டணியில் இருந்து விடுபட்டு ஒரு புதிய கூட்டணி அமைத்தாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால்தான் தற்போது இளவட்ட இயக்குனரான ரஞ்சித் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் இந்த வாய்ப்பு அனிருத்துக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தபோதும் தனது அட்டகத்தி, மெட்ராஸ் என்ற இரண்டு திரைப்படங்களுக்கும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ராசியான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என்று அவர் பெயரை ரஞ்சித் முன்மொழிந்தபோது எந்தவித மறுப்பும் சொல்லாமல் உடனே ஓகே சொல்லி விட்டாராம் ரஜினி.
விளைவு, ரஜினி திரைப்படத்துக்கு தற்போது இசையமைத்துக்கொண்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். இதனால் ரஜினி, ரகுமான் கூட்டணியில் இருந்து விலகி வந்தபோதும் அந்த இடத்துக்கு தன்னால் வர முடியவில்லையே என்று கவலையில் உள்ளாராம் அனிருத்.
சினிமாவில் மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று அனிருத்! எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்...
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago