2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

உஷாரான சமந்தா

George   / 2015 ஜூலை 21 , பி.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பள விடயத்தில் பலர் தன்னை ஏமாற்றியதால் உஷாரான சமந்தா இனி தான் நடிக்கும் படங்களின் படபிடிப்பு நிறைவடைவதற்கு முன்னரே முழு சம்பளத்தையும் தந்துவிட வேண்டுஎன கண்டிஷன் போட்டு விடுகிறாராம்.

தமிழில் பாணா காத்தாடியில் அறிமுகமான சமந்தா, அஞ்சான், கத்தி திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு வரை தெலுங்கில்தான் அதிக திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அங்குள்ள நடிகைகளெல்லாம் துண்டு துணியுடன் ஆடிக்கொண்டிருக்கையில், சமந்தா மட்டும் தனக்கென ஒரு வட்டம் போட்டு அதற்குள் நின்றுதான் நடித்துக்கொண்டிருந்தார். 

அதனால், அவருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் அங்கு இருந்தது. ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த நேரத்தில்தான் மீண்டும் கோலிவூட் சினிமா ஆசை தலைதூக்க லிங்குசாமியின் அஞ்சான் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடித்தார். 

முதலில் சிறிதளவுதான் கவர்ச்சி என்றவர்கள் ஒவ்வொரு படியாக இறங்கி சமந்தாவை உரிச்ச கோழியாக்கி விட்டனர். அப்படி நடித்ததால்தான் சித்தார்த்-சமந்தாவுக்கு இடையிலான  காதல்கூட முறிந்து போனதாக அப்போது கூறப்பட்டது.

இது இப்படியிருக்க, தற்போது பத்து எண்றதுக்குள்ள, விஐபி-2, பிரமோற்சவம், 24, வடசென்னை, விஜய்யின் 59வது திரைப்படம் என பல மெகா திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, இந்த திரைப்படங்களில் கவர்ச்சிக்கு கட்டுப்பாடு வைத்தே நடித்து வருகிறார்.
மேலும், கவர்ச்சியை குறைப்பதால் சம்பளத்தை குறைக்கக்கூடாது என்றும் கண்டிசனாக பேசி நடித்து வருகிறார்.இந்த நிலையில், சில நிறுவனங்கள், பாதி சம்பளத்தை கொடுத்து விட்டு மீதியை அதோ இதோ என்று அலைய விடுவதும் நடக்கிறதாம்.

இதனால், ஆரம்பத்தில் மெகா ஹீரோக்களின் திரைப்படங்கள் என்கிறபோது கொஞ்சம் விட்டுக் கொடுத்த சமந்தா, இப்போது கடைசி 4 நாட்கள் படப்பிடிப்பு இருக்கும்போதே மொத்த தொகையையும் கொடுத்து விட வேண்டும் என்று அட்வான்ஸ் வாங்கும்போதே கறாராக பேசி விடுகிறார். அப்படி மொத்த பணத்தையும் வழங்காமல்; யார் படப்பிடிப்புக்கு அழைத்தாலும் சமந்தாவின் அலைபேசி அமைதியாகிவிடுகிறதாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .