2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இயக்குநராகும் தனுஷ்

George   / 2015 ஜூலை 26 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் நடிகர் ஆவதும் நடிகர் இயக்குநர் ஆவதும் தமிழ்ச் சினிமாவில் இன்றைய காலங்களில் வழமையாகிவிட்ட நிலையில் நடிகர் தனுஷ் திரைப்படமொன்றை இயக்கியுள்ளதாக வெளியான தகவல் இரசிகர்களை வியக்கவைக்கின்றது.

வேலையில்லா பட்டதாரி பாகம் இரண்டை தனுஷ், தான் இயக்கியுள்ளதாகவும் இயக்குநரும் ஒளிபதிவாளருமான வேல்ராஜ் விலகி கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிக்க வேல்ராஜ் இயக்கிய வேலையில்லா பட்டதாரி வெற்றியும் பெற்றதை தொடர்ந்து தனுஷ் - வேல்ராஜ் கூட்டணியில் அடுத்த திரைப்படத்தை உடனடியாகத் தொடங்கினார்கள். 

வேலையில்லா பட்டதாரி2 என்று இப்போதைக்கு சொல்லப்படும் இந்த திரைப்படத்தின்  படப்பிடிப்பும் முடிவடையும் நிலையில் இருக்கிறது. 

முதல் திரைப்படத்தில் ஒளிப்பதிவு இயக்கத்தைக் கவனித்து முழுமூச்சாக ஈடுபட்ட வேல்ராஜ், அடுத்த திரைப்படத்தை  தொடங்கிய போது ஆரம்பத்தில் வந்தவர் பிறகு கண்டு கொள்ளவில்லை. ருவருக்கும் மனஸ்தாபம் அதனால்தான் வேல்ராஜ் விலகிக் கொண்டதாகவும் பேச்சு வந்தது. 

இதை வேல்ராஜ் மறுத்தாலும் இதில் உண்மை இல்லாமல் இல்லை பாயும்புலி திரைப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வேலைபார்க்கப் போய்விட்டார். ஒரு படத்தை இயக்குபவர் மாபெரும் பொறுப்புள்ள பணியை விட்டுவிட்டு ஒளிப்பதிவாளராகப் போவாரா ? காரணம் முதல் திரைப்படத்தில் அடக்கி வாசித்த தனுஷ் இதில் தலையிட ஆரம்பித்ததுதானாம். 

வேல்ராஜ் இல்லாமல் திரைப்படத்தின் பெரும் பகுதியை இயக்கியது தனுஷ்தானாம். மனைவி ஐஸ்வரியாவைத் தொடர்ந்து தனுஷையும் விரைவில் இயக்குநராக பார்க்கலாம். திரைப்படம் திகைகு வரும்போது இயக்குநரின் பெயர் வேல்ராஜ் - தனுஷ் என்று வருமா இல்லாவிட்டார் தனுஷ் என்று வருமான என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X