2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

3 மணித்தியாலமாக மேக்கப் போட்ட இளவரசி ஹன்ஸி

George   / 2015 ஜூலை 27 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய்யுடன் 'புலி' திரைப்படத்தில் இளவரசி வேடத்தில் நடித்துள்ள ஹன்சிகா, இந்த வேடத்துக்காகக சுமார் 3 மணி நேரம் தனக்கு மேக்கப் போடப்பட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, 'நான் 'புலி' திரைப்படத்தில் இளவரசியாக நடிக்கிறேன். இந்த வேடத்துக்காக எனக்கு 3 மணி நேரம் மேக்கப் போட்டார்கள். மேலும், பட்டு உடை, கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து நடித்திருக்கிறேன். 

என்னுடைய காத்திரத்தை பார்த்து ஸ்ரீதேவி அசந்துட்டாங்க. மேலும், இந்த திரைப்படத்தை பற்றி எதுவும் சத்தமாக பேசக்கூடாது என்று இயக்குநர் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுமாதிரி திரைப்படம் வந்ததில்லை. இனி வரவும் முடியாதுன்னு பேசிக்கிறாங்க. இதை கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது' என்றார்.

இந்த திரைப்படத்தில் ஹன்சிகாவுடன், ஸ்ருதிஹசன், ஸ்ரீதேவி கபூர், சுதீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிம்புதேவன் இயக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திரைப்படத்தின் இசை எதிர்வரும் ஓகஸ்ட மாதம் 2ஆம' திகதி வெளியிடவுள்ளதுடன் விநாயகர் சதுர்த்தியன்று திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X