Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஜூலை 28 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலைப்பைப் பார்த்து தப்பா புரிஞ்சுக்காதிங்க. நடிகை அஞ்சலி மாலை ஆறு மணி ஆகிவிட்டால் ஆடுவதற்கு போய்விடுவாராம். இதனை, சகலகலா வல்லவன் திரைப்படத்தின் இயக்குநர் சுராஜ் சொல்லியிருக்கிறார்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி மீண்டும் நாயகியாக மறுபிரவேசம் ஆகியுள்ள திரைப்படம் சகலகலா வல்லவன். ஜெயம் ரவி ஜோடியாக அஞ்சலி, த்ரிஷா நடித்துள்ள இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு திங்கட்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குநர் சுராஜ், அஞ்சலி ஆடிய ஆட்டம் பற்றி சுவையான தகவல் ஒன்றைத் தெரிவித்தார்.
'நான் எப்போதுமே படப்பிடிப்பை ஆறு மணிக்கு மேல வைக்க மாட்டேன். அஞ்சலி படப்பிடிப்புல இருக்கும் போதெல்லாம் ஆறு மணி ஆச்சின்னா போதும் ஆட்டம் போட ஆரம்பிச்சிடுவாங்க. அவங்களுக்கு கிரிக்கெட் ஆடத் தெரியுமோ தெரியாதா, அவங்களுக்கு பந்து போடறவங்களுக்கு போடத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் ஒன்பது மணி வரைக்கும் கிரிக்கெட் ஆடிக்கிட்டே இருப்பாங்க.
சூரி உட்பட எல்லாருமே ஏம்மா காலையில சூட்டிங் போக வேணாம இப்படி ஆடிக்கிட்டிருந்தால் எப்படின்னு கேட்டாலும் நிறுத்த மாட்டாங்க. இப்படி சூரி கேக்கப் போயிதான் அவரோட ஐபோனை உடைச்சிட்டாங்க. அதுக்கப்புறம் அவங்க சூரியயை பார்க்கவே இல்லை.
இப்ப சூரி கல்கத்தாவில் அஜீத் திரைப்பட சூட்டிங்குல இருக்காரு, அஞ்சலி பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருக்கா சார், என் ஐபோனுக்கு காசு கேட்டு வாங்கிக் கொடுங்கன்னு சொன்னாரு. இதை அஞ்சலி இருக்கிற மேடையிலயும் சொல்லிடறன்,' என்றார்.
பதிலுக்கு அஞ்சலி, சார் அவர் வேற புது ஐபோன் வாங்கணும்னு சொன்னாரு, அதான் பழசு எதுக்குன்னு அதை உடைச்சிட்டேன்,' என மேடையிலேயே பதிலளித்தார்.
இப்ப சொல்லுங்க தலைப்பு சரிதானே!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago