Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 28 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொடர்ந்து வெற்றியை தவறவிட்டுக் கொண்டிப்பதால் விஜய்சேதுபதி விரக்தியில் உள்ளாராம்.
நடுவுல கொஞ்சம் பக்கத்தக்காணோம், பீட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பலகுமாரா, என ஆரம்பத்தில் வரிசையாக வெற்றித் திரைப்பபடங்களைக் கொடுத்த விஜய்சேதுபதிக்கு அதன் பிறகு தோல்விகள் அணிவகுக்கத் தொடங்கிவிட்டன.
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம், புறம்போக்கு என விஜய்சேதுபதி நடித்த திரைப்படங்கள் அனைத்துமே தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. அதன் காரணமாக அவர் நடித்த இடம்பொருள் ஏவல் திரைப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை.
விஜய்சேதுபதி தயாரித்த ஆரஞ்சமிட்டாய் திரைப்படத்துக்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. அதனால் ஆரஞ்சுமிட்டாய் திரைப்படம் வெளியாரும் திரையரங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளன.
இதுவரை 100 திரையரங்குகள் கூட இறுதி செய்யப்படவில்லை. அதேதினத்தில் சகலகலாவல்லவன், இது என்ன மாயம் உட்பட வேறு திரைப்படங்களும் வெளிவருவதால் ஆரஞ்சுமிட்டாய் திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் அதிகமாகிவிட்டது. எனவே திரைப்படத்தின் வெளியீட்டு தினத்தை தள்ளி வைக்கலாமா என் ஆலோசனை செய்து வருகிறாராம் விஜய்சேதுபதி.
அவர் இந்த முடிவுக்கு வர காரணம். ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்துக்கு விளம்பரம் செய்ய போதிய அளவு பணம் இல்லையாம். இதனால் விரக்தியடைந்து காணப்படுகிறாராம்.
3 hours ago
9 hours ago
9 hours ago
27 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
9 hours ago
27 Aug 2025