George / 2015 ஜூலை 28 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பு நடிப்பில் உருவாகி நீண்டகாலமாக வெளியிடப்படாமல் சிக்கலில் இருக்கும் வாலு திரைப்படத்தை வெளியிடுவதற்கு உதவிசெய்ய நடிகர் விஜய் முன்வந்துள்ளார்.
வாலு' திரைப்படத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, நடிகர் விஜய் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு அறிந்துள்ளார். பின்னர், அந்த திரைப்படம் வெளியாவதற்கு தன்னால் இயன்ற அளவு உதவி செய்வதாக தெரிவித்துள்ளதுடன் தனக்கு தெரிந்த விநியோகஸ்தர்களிடமஇந்த திரைப்படம் வெளியாக உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளாராம்.
சிம்புவின் அப்பாவும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு விஜய் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அதேபோல், விஜய்யும் டி.ராஜேந்தர் மீது அதிக பற்று கொண்டவர்.
அவருடைய திரைப்படத்துக்கு இதுபோல் ஒரு பிரச்சினை என்றதும், விஜய் அதை தாங்கிக் கொள்ளமுடியாமல் உதவ முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மரியாதை நிமித்தமாகவே இந்த உதவியை செய்வதாகவும் விஜய் தரப்பில் கூறப்படுகிறது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago