2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

திருமணமா? எனக்காக? வேண்டாம்

George   / 2015 ஜூலை 29 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக வெளியான செய்தியில்  சிறிதும் உண்மையில்லை என்றும் அவை வெறும் வதந்தி என்றும் கூறியுள்ள பொலிவூட் நடிகை காத்ரீனா கைப், தனக்கு தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஜூலை 16ஆம் திகதி, கத்ரீனா கைப், தனது பிறந்தநாளை, நடிகர் ரன்பீர் கபூருடன் அலிபாக்கில் கொண்டாடியதாகவும், அப்போது ரன்பீர் கபூர், காத்ரீனாவுக்கு பிளாட்டினம் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட ஆபரணத்தை, திருமண நிச்சயதார்த்த நினைவாக வழங்கியதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற பான்டோம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்களை சந்தித்த காத்ரீனா கைப் கூறியதாவது, 'நடிகர் ரன்பீர் கபூர்வுடன் எனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக வந்துள்ள செய்தியில் சிறிதும் உண்மையில்லை, அவை வெறும் வதந்திகள், தனக்கு தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை' என்று கூறினார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .