Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Administrator / 2015 ஜூலை 29 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
விலங்குகள் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து விலங்குகள் உரிமைக்கு குரல் கொடுத்துவரும் பொலிவூட் நடிகை இஷா குப்தா, இனிமேல் சைவ உணவுகளை மாத்திரம் சாப்பிடுவதற்கும் பசும்பால் மற்றும் அதுசார்ந்த உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் தீர்மானித்துள்ளாராம்.
கவர்ச்சி நடிகையான அவர், தான் இனிமேல் அசைவ உணவுகளை உண்ணுவதில்லை என்று கூறியுள்ளதுடன் அதனை செயற்படுத்திக் காட்டவும் தயாராகிவிட்டாராம்.
இஷா குப்தாவின் இந்த முடிவை அடுத்து, சைவ உணவு உண்ணும் பழக்கத்தை அவரது சகாக்களும் பின்பற்றுவதால் தற்போது மகிழ்ச்சியில் உள்ளாராம்.
சைவ உணவு உண்ணும் ஒருவர், விலங்குகள் துன்புறுத்தப்படுதையும் கொல்லப்படுவதையும் தடுப்பதாக கூறும் இஷா, சைவ உணவுகளானவை உடல்நலத்தை பாதுகாத்து புதுப்பொலிவை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றார்.
இஷாவின் இந்த வேண்டுகோளை அவரது இரசிகர்களும் பின்பற்ற ஆரம்பித்துள்ளதாக பொலிவூட் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago