2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

என்னது! நடிகைகளுக்கு தமிழ் தெரியாதா?

George   / 2015 ஜூலை 29 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளுடன் நடிப்பது சௌகரியமாக இருக்கும். மொழி தெரியாதவர்களுடன் நடிக்கும் போது நாம் ஒரு வசனம் பேச அவர்கள் வேறு ஏதோ முகபாவத்தை வெளிப்படுத்தினால் நமக்கும் நன்றாக நடிக்க வராது' என நடிகர் விக்ரம் பிரபு கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியே சிலருக்குத் தமிழ் பேசத் தெரிந்தாலும் தங்களுக்கு அது அரைகுறையாகத்தான் தெரியும் என்பது போலவே பேசுவார்கள். 

த்ரிஷா உட்பட சில நாயகிகளை இதில் சேர்த்துக் கொள்ளலாம். லட்சுமி மேனன், நயன்தாரா, அஞ்சலி, சமந்தா, பிரியாமணி, பிரியா ஆனந்த் போன்ற நடிகைகள் நன்றாகவே தமிழ் பேசுவார்கள். 

மும்பையிலிருந்து வந்த தமன்னா கூட புரிந்து கொள்ளும் அளவுக்கு நன்றாகப் பேசுவார். அப்படி தமிழ் பேசத் தெரிந்த நடிகைகள் வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

தற்போது பல திரைப்படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இது என்ன மாயம் அவருடைய முதல் திரைப்படமாக நாளை வெளியாக உள்ளது. 

கீர்த்தி சுரேஷூடன் நடித்த அனுபவத்தைப் பற்றி திரைப்படத்தின் நாயகன் விக்ரம் பிரபு கூறியதாவது, 

'தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளுடன் நடிப்பது சௌகரியமாக இருக்கும். மொழி தெரியாதவர்களுடன் நடிக்கும் போது நாம் ஒரு வசனம்; பேச அவர்கள் வேறு ஏதோ முகபாவத்தை வெளிப்படுத்தினால் நமக்கும் நன்றாக நடிக்க வராது'.

கீர்த்தி சுரேஷ் நன்றாகத் தமிழ் பேசுவர். அதனால், அவருடன் நடிப்பது எளிதாக இருந்தது. இவன் வேற மாதிரி திரைப்படத்தில் தமிழ் தெரியாத சுரபியுடன் நடிக்கும் போது சிரமமாக இருந்தது. முதல் திரைப்படமான கும்கியில் நடித்த லட்சுமி மேனன், அரிமா நம்பியில் நடித்த பிரியா ஆனந்த் ஆகியோர் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். எனவே அந்தப் திரைப்படத்தில் எனக்குப் பெரிய சிரமம் இருந்ததில்லை' என்றார்.

அவர் சொல்வதும் ஒரு விதத்தில் சரிதான், எந்தக் காட்சியில் நடிப்பதற்கு மொழி தேவையோ இல்லையோ, காதல் காட்சிகளில் மொழி தெரிந்து கொண்டு நடித்தால்தானே ஃபீலிங் சரியாக வரும் என நீங்களும் ஃபீல் பன்னுவது புரிகிறது...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X