George / 2015 ஜூலை 29 , பி.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
டோலிவூட்டின் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நானி, பலே பலே மகாதேவோ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்தார். காதலை மையமாகக் கொண்டு மாறுபட்ட திரைக்கதையில் உருவாகும் இந்தத்திரைப்படத்தை இயக்குநர் மாருதி இயக்குகின்றார்.
நானிக்கு ஜோடியாக நடிகை லாவண்யா திரிபதி நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவு பெற்று இறுதிக்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. திரைப்படத்தின்; பாடல்களை ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் இத்திரைப்படத்தின இயக்குநர் மாருதி கூறியுள்ளார்.
மேலும், இந்த திரைப்படம் வழக்கமான பொழுதுபோக்கு திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு உருவாக்கப்படுள்ளதாக கூறிய இயக்குநர் மாருதி, நானி மற்றும் லாவண்யாவிற்கு இடையேயான காட்சிகள் ரசிகர்களிடம் பெரிதாக பேசப்படும் எனவும் கூறியுள்ளார்.
பலே பலே மகாதேவோ திரைப்படம் ஓகஸ்ட் மாத இறுதியில் திரைக்கு வரவுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago