2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

குத்தாட்டம்போட தமன்னாவுக்கு அழைப்பு

George   / 2015 ஜூலை 30 , மு.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார்த்திக்குடன் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் தமன்னாவுக்கு டோலிவுட் அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆருடன் குத்தாட்டம் போட அழைப்பு வந்துள்ளதாம். 

டோலிவூட்டில் பாகுபலி திரைப்படத்தையே நம்பியிருந்த நடிகை தமன்னாவுக்கு அத்திரைப்படம் வெற்றியை தேடி தந்தது. டோலிவூட்டில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நாயகியாக நடித்து வந்த தமன்னாவுக்கு அண்மைகாலமாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்து வந்தன.

பாகுபலி திரைப்படம், மீண்டும் தான் விட்ட இடத்தை பிடித்து தரும் என தமன்னா நம்பிக்கொண்டிருந்தார். பாகுபலி திரைப்படத்தில் இளவரசியாக ரசிகர்களை கவர்ந்த தமன்னாவுக்கு  அவர் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. 

இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆருடன் குத்தாட்டம் போட அழைப்பும் வந்துள்ளதாம். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்குகின்றார். 

இத்திரைப்படத்தில் வரும் குத்தாட்ட பாடலுக்கு ஜூனியர் என்.டி.ஆருடன் நடனமாட தமன்னாவிடம் சுகுமார் கேட்டுள்ளார். தமன்னா ஜூனியர் என்.டி.ஆர் திரைப்படத்தில் நடனமாடுவது உறுதி செய்யப்பட்ட பின்னர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X