George / 2015 ஜூலை 30 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் கேட்டுகொண்டதுக்காக அவரது திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து நன்றிக்கடன் செலுத்தியுள்ளார் நடிகை அஞ்சலி.
தங்கமீன்கள் திரைப்படத்தை இயக்கி நடித்த ராம் தற்போது தரமணி என் திரைப்படத்தை இயக்கி வருகிறார். வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கிறார். என்;ரியா கதாநாயகியாக நடிக்கும் தரமணி திரைப்படம் தொடங்கப்பட்டு பல மாதங்களாகிவிட்டநிலையில் கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது.
தரமணி திரைப்படத்துக்கு பொழுதுபோக்கு அம்சத்தை கூட்டுவதற்காக இப்படத்தில் அஞ்சலியை ஒரு காட்சியில் தலைகாட்ட வைத்து சிறப்பு கேரக்டர் ஒன்றில் நடிக்க வைத்துள்ளார் ராம்!
ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் திரைப்படத்தில்தான் நடிகையாக அறிமுகமானார் அஞ்சலி. அதன் பிறகு அஞ்சலியின் நிலை உயர்ந்துவிட்டது. ராம் மட்டும் கஷ்டநிலையிலேயே இருந்தார். தற்போது வசந்த் ரவி நடிப்பில் தரமணிஎன்ற திரைப்படத்தை இயக்கி வரும் ராம், அண்மையில் அஞ்சலியை சந்தித்து தன் திரைப்படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டாராம்.
எனவேதான் மீண்டும் ராம் இயக்கத்தில் நடிக்கிறார் அஞ்சலி. அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. தரமணி திரைப்படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார் என்றும் பேச்சு அடிபடுகிறது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago