2025 மே 17, சனிக்கிழமை

கிராமத்து புயல்

George   / 2015 ஜூலை 31 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீட்சா திரைப்படத்துக்கு பிறகு தமிழில் தனக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கும் என்றுதான் எதிர்பார்த்தார் ரம்யா நம்பீசன். ஆனால், அதன்பிறகு சில சின்ன திரைப்படங்களில்தான் நடித்தார். அதில் சில வெற்றி பெறவில்லை. சில திரைப்படங்கள் திரைக்கே வரவில்லை.

இந்த நிலையில்தான், தற்போது அருள்நிதிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்ற திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. இந்த திரைப்படம் பெரிய ஹிட் இல்லை என்றபோதும், ஓரளவு ஓடிக்கொண்டிருக்கிறது. 

அதோடு, ரம்யா நம்பீசனின் கிராமத்து பெண் வேடம் பலரை கவர்ந்திருக்கிறது. நாகரீக உடையில் நடித்த கதாபாத்திரங்களை விட புடவை கெட்டப்பில் நடித்த இந்த கதாபாத்திரத்தில் உங்களது நடிப்பு பிரமாதமாக உள்ளது என்று சில கோலிவூட் இயக்குநர்களே ரம்யா நம்பீசனிடம் சொன்னார்களாம். 

அதோடு, ஒரு கிராமத்து திரைப்படமும் அவருக்கு கிடைத்திருக்கிறதாம். இதனால் திரைப்படம் எதிர்பார்த்தபடி ஓடாவிட்டாலும் தனது நடிப்பு வெளிதெரிந்துள்ளது என்று நினைக்கும் ரம்யா நம்பீசன், நான் யாரையும் தேடிச்செல்ல மாட்டேன். என்னைத்தேடி வரும் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று முன்பு வெட்டியாக பேசிக்கொண்டிருந்தவர் இப்போது அதை ஓரங்கட்டிவிட்டு, சில கிராமத்து இயக்குநர்களை தொடர்பு கொண்டு வாயப்பு கேட்டு வருகிறாராம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .