2025 மே 17, சனிக்கிழமை

பரவை முனியம்மாவுக்கு உதவிக்கரம்

George   / 2015 ஓகஸ்ட் 02 , பி.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரவை முனியம்மாவுக்கு 6 இலட்சம் இந்திய ரூபாய் நிதியுதவி வழங்குமாறும்; 6 ஆயிரம் இந்திய ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மதுரை அருகே உள்ள பரவை கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மா (வயது73). கிராமியப் பாடல்களை திருவிழாக்களில் பாடியதன் மூலம் பிரபலமான இவர் தமிழில் 76 திரைப்படங்களிலும், மலையாளத்தில் 4 திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

சினிமாவில் நடிக்க நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் இந்திய ரூபாய் வாங்கிய அவருக்கு வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருந்துள்ளது. இதனால் பொருளாதார ரீதியில் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தார். கணவரை இழந்து மனதளவில் பாதிக்கப்பட்ட பரவை முனியம்மாவுக்கு கடந்த வாரம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து மதுரை–தேனி வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரவை முனியம்மாவின் ஏழ்மையை உணர்ந்த நடிகர் தனுஷ் 5 இலட்சம் இந்திய ரூபாய் கொடுத்துள்ளார்.

சரத்குமார், ராதாரவி தரப்பில் 25 ஆயிரம் இந்திய ரூபாயும் நடிகர் சிவகார்த்திகேயன் 10 ஆயிரம் இந்திய ரூபாயும் கொடுத்தார்கள். நடிகர் விஷால் மாதந்தோறும் 5 ஆயிரம் இந்திய ரூபாய் வழங்குவதாக சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் பரவை முனியம்மாவுக்கு 6 இலட்சம் இந்திய ரூபாய் நிதியுதவி வழங்குமாறு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து பரவை முனியம்மா கூறும்போது, முதல்வர் ஜெயலலிதாவின் உதவியை உயிருள்ளவரை மறக்க மாட்டேன்.

வயதாகி நோய் வாய்ப்பட்டதால் சினிமா மற்றும் திருவிழாக்களில் பாட வாய்ப்பு வரவில்லை. கஷ்டப்படும் நேரத்தில் ஆண்டவன்போல சரியான நேரத்தில் உதவி புரிந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .