2025 மே 17, சனிக்கிழமை

லோரன்ஸ் ஜோடியாக ஜோ?

George   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் ராகவா லோரன்ஸின் புதிய திரைப்படமான நாகாவில் லோரன்ஸ் ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.

நடிகர் சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பிலிருந்து விலகிய ஜோதிகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு  36 வயதினிலே திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜோதிகா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார். 

ஆனால், கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற கண்டிஷனுடன் தான் கதை கேட்டு வருகிறார். பல கதைகள் கேட்டும் பிடிக்கவில்லை என்று சொன்ன ஜோதிகா, அண்மையில் ஒரு கதையைக் கேட்டார். கதை ஓகே என்று சொன்னதோடு மிகப்பெரிய சம்பளம் கேட்டிருக்கிறார். 

காஞ்சனா திரைப்படத்தின்  வெற்றிக்குப் பின்னர் வேந்தர் மூவிஸூக்காக மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா என  இரண்டு திரைப்படங்களை இயக்கி, நடிக்கிறார் ராகவா லோரன்ஸ்.  

இவற்றில் நாகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கத்தான் ஜோதிகாவை அணுகினார் ராகவா லோரன்ஸ் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

ஜோதிகா நடித்தால் திரைப்படத்தின் ரேன்ஜ் எகிறிவிடும் என்பதால் அந்த திரைப்படத்தில் தன்னுடைய சம்பளம் மற்றும் திரைப்படத்தின் பட்ஜெட்டைக்கூட தயாரிப்பாளரிடம் சொல்லாமல் இருக்கிறாராம். 

இந்நிலையில், நல்ல நாள் என்பதால் செவ்வாய்க்கிழமை திரைப்படத்தின் தொடக்கவிழாவை நடத்தினார்கள். ஆனால் ஜோதிகாவின் சம்பளப்பேச்சுவார்த்தை முடியாததினால் நாகா திரைப்படத்தின் கதாநாயகி பெயரை அறிவிக்கவில்லை.
இருந்தாலும் ஜோதிகாவே இந்த திiரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .