2025 மே 17, சனிக்கிழமை

சூரியின் ஒரு நாள் சம்பளம் 7 இலட்சமாம்

George   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமடிக்கு பெயர்பெற்ற தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் வடிவேலு விட்டுச்சென்ற கேப்பில் வீடுகட்டி முதல்தர நகைச்சுவையாளனாக சுற்றி வந்த சந்தானம், நானும் ஹீரோதான் என சொல்லிலிட்டதால் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பரோட்டா சூரி தற்போது முதல்தர கொமடி நடிகராகிவிட்டார்.

இதனையடுத்து, கடந்த வருடம்வரை ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் இந்திய ரூபாய் சம்பளம் வாங்கிய சூரியின்  சம்பளம் இப்போது ஒரு நாளைக்கு 7 இலட்சம் இந்திய ரூபாயாக உயர்வடைந்துள்ளது.

விஜய்யின் தலைவா திரைப்படத்திலும் அஜீத்தின் வீரம் திரைப்படத்திலும் கொமடியனாக சந்தானம் நடித்தார். ஆனால், அதே விஜய்யின் ஜில்லாவில் சூரி நடித்ததுடன் இப்போது சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் திரைப்படமும் சூரி பக்கம் சென்றுவிட்டது.

சந்தானம் ஹீரோவாக இடம்பெயர்ந்து விட்டதால், முதன்மை கொமடியனாக கம்பு சுத்திக்கொண்டிருக்கும் சூரியின் கைவசம் 15க்கும் அதிகமான திரைப்படங்கள் உள்ளன.

இவை அனைத்துமே மெகா திரைப்படங்கள் என்பதுடன் சில திரைப்படங்களில் ஹீரோவுக்கு இணையான வேடங்களிலும் இன்னும் சில திரைப்படங்களில் ஹீரோக்களை பின் தள்ளி விட்டு தானே முக்கிய ரோலில் நடிக்கிறாராம் சூரி.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .