Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டாம் உலகம் திரைப்படத்தில் நடித்தபோது உருவான ஆர்யா-அனுஷ்கா நட்பு, நகமும் சதையுமாக வளர்ந்ததுடன்இந்த நட்பு இப்போது இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் இன்னும் பின்னி பிணைந்துள்ளது.
இதனையடுத்து, இவர்கள் இருவரையும் பிரிக்கும் முயற்சியாக தற்போது இருவரது வீட்டிலுமே அவர்களுக்கு திருமணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன் வரன் பார்க்கும் படலத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பாகுபலி, ராணி ருத்ரம்மா தேவி திரைப்படங்களில் ஒப்பந்தமானபோது திருமணம் செய்யுமாறு அனுஷ்காவை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தினர்.
இரண்டு திரைப்படங்களுமே எனது சினிமா வாழக்கையில் முக்கியமானவை இந்த திரைப்படங்களை முடித்த பிறகு பார்க்கலாம் என்று பெற்றோரை தடுத்து வைத்தார் அனுஷ்கா.
ஆனால், இப்போது அந்த திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகும் அவர் வேறு சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகியபோது அவருக்கு வயது 33 ஆகிவிட்டது.
முகத்திலும் முதிர்ச்சி தென்பட்டு விட்டதால், திருமண விடயத்தில் அனுஷ்காவின் பெற்றோர் அவசரம் காட்டத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து தினமும் யோகா செய்து என்னை இன்னும் இளமையாக்கிக்கொண்டு நடிக்கிறேன் என்று அனுஷ்கா சொன்னதற்கு பெற்றோர் உடன்படவில்லையாம்.
இப்படியே போய்க்கொண்டிருந்தால் சரிவராது என்று வரன் பார்க்கும் வேலைகளை தீவிரப்படுத்தி விட்டுள்ளார்களாம்.
அதனால் இந்த ஆண்டு அல்லது அடுத்து ஆண்டு தொடக்கத்தில் அனுஷ்காவுக்கு கட்டாயம் திருமணமாகி விடும் என்று அவருக்கு நெருக்கமான தகவல்கள் கூறுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago