George / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு சமந்தா மிகவும் சிரமப்பட்டுள்ளாராம்.
நவீன ஆடைகளை அணிந்தே அதிகமான திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சேலை கட்டிய குடும்பப் பெண்ணாக நடித்திருக்கிறார்.
தமிழ்நாட்டு பெண் கதாபாத்திரம் என்றபோதும், தமிழ்நாட்டு பெண்ணான சமந்தா அந்த பாத்திரத்தில் நடித்தபோது ரொம்பவே சிரமப்பட்டாராம்.
அதாவது, தினமும் அவர் படபிடிப்பு தளத்துக்கு வந்ததுமே, அவரது முகத்தில் டல் மேக்கப் ஒருவர் போட, இன்னொருவர் தலையில் அதிக முடியை வைத்து ஹேர் ஸ்டைலை மாற்றுவாராம். அதையடுத்து கொஸ்டியூமர் அவருக்கு சேலை கட்டிவிடுவாராம்.
ஆக, சமந்தாவை தமிழ்ப்பெண்ணாக மாற்றுவதற்குள் பல கலைஞர்கள் தங்களது தொழில்யுக்தியை காட்டியிருக்கிறார்கள். ஆனால், சமந்தாதான், இந்த கெட்டப்புக்கு மாறும்போதும் சரி, நடித்து முடித்து மேக்கப்பை கலைக்கும்போதும் சரி ரொம்பவே கஷ்டப்பட்டாராம்.
அந்த கெட்டப்பில் இருந்து விடுபட்ட பிறகே அவர் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறாராம். அந்த அளவுக்கு அந்த கெட்டப்பில் தனது கை கால்களை கட்டிப்போட்டது போன்ற மனநிலையில் இருந்தாராம்.
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago