George / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே தனி ஹீரோயினாக நடித்த எமி ஜெக்சன் அதையடுத்து தாண்டவம் திரைப்படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்தார். பின்னர் ஐ திரைப்படத்தில் தனியாக நடித்தவர், இப்போது விஐபி-2வில் சமந்தாவுடன் நடித்துள்ளார்.
இதற்கிடையே மாஸ் திரைப்படத்தில் டம்மியான ஹீரோயின் வேடம் என்பதால் ஒப்பந்தமாகி பின்னர் வெளியேறினார். அந்த வேடத்தில்தான் சகுனி ப்ரணிதா நடித்தார். இந்த நிலையில், இனிமேல் தனி ஹீரோயினி கதைகளுக்கே முதலிடம் கொடுப்பேன் என்று தற்போது உதயநிதியுடன் கெத்து திரைப்படத்தில் ஒரு கெத்தான வேடத்தில் நடிக்கிறார்.
இருந்தாலும், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தில் மீண்டும் சமந்தாவுடன் இணைந்து நடிக்கிறார். இந்த திரைப்படத்திலும் சமந்தாவுக்குத்தான் முதலிடம் கொடுப்பார்களோ என்கிற அச்சம் எமியின் மனதளவில் இருந்தபோதும், பெரிய ஹீரோவின் திரைப்படம் ஆரம்பத்திலேயே பெரிய பேச்செல்லாம் பேசினால் கழட்டி விட்டு விடுவார்கள் என்பதால், இப்போதைக்கு அடக்கி வாசிப்போம். போகப்போக இயக்குநரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சரி பண்ணிக்கொள்ளலாம் என்று பொறுமை காக்கிறாராம் எமி ஜாக்சன்.
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago