2025 மே 17, சனிக்கிழமை

காஜலின் பாசமழை

George   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஷாலுக்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடித்துள்ள பாயும்புலி திரைப்படத்தில் காஜலுக்கு தங்கையாக ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளாராம்.

சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி, சூரி உள்ளிட்டவர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

கதைப்படி இந்த திரைப்படத்தில் காஜல்அகர்வாலின் தங்கை வேடத்தில் ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளதுடன் அவர்களுக்கிடையே சென்டிமென்ட் காட்சிகளும் நிறைய உள்ளதாம். 

இந்த திரைப்படத்தில் நடித்து வந்தபோதும்  உண்மையான அக்கா - தங்கை போலவே பழகி வந்த இவர்கள் இருவரும் இப்போதும் அவ்வப்போது சந்தித்து பாசத்தை பொழிகின்றனராம். 

அதோடு, காஜல்அகர்வாலை சிஸ்டர் என்றே அழைக்கிறாராம் ஐஸ்வர்யா தத்தா. அதில் உருகிப்போன காஜல்அகர்வால், எனக்கு ஏற்கனவே நிஷா அகர்வால் என்றொரு தங்கை இருக்கிறார். இப்போது நீ இன்னொரு தங்கையாகி விட்டாய் என்றாராம்.

அதையடுத்து, மும்பை பெண்ணான காஜலும், பெங்காலி பெண்ணான ஐஸ்வர்யா தத்தாவும், தங்களது அன்றாட வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டது என அனைத்து விடயங்களையும் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து வருகிறார்களாம். 

காஜலின் அருமை பெருமைகளை தனது பெற்றோரிடம் ஐஸ்வர்யா தத்தா சொன்னதை அடுத்து, கண்டிப்பாக அவரை ஒருமுறை தங்களது வீட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்களாம்.

இந்த தகவலை ஐஸ்வர்யா தத்தா, காஜல்அகர்வாலிடம் சொன்னபோது, கண்டிப்பாக பெங்காலுக்கு வரும்போது வருகிறேன் என்று கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .