2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

விஜய்- அஜீத்துடன் மோதும் விக்ரம்

George   / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ திரைப்படத்துக்காக இரண்டரை வருடங்களை செலவிட்ட விக்ரம், விஜய்மில்டனின் பத்து எண்றதுக்குள்ள திரைப்படத்தை வேகவேகமாக முடிக்க நினைத்தார். ஆனால், படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் அச்சுறுத்தியதால், அதிர்ந்து போன படக்குழுவின் வேகம் குறைந்து போனது.

அதனால் க்ளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க சென்னையிலேயே இடம் பார்த்து படமாக்கினார் விஜய் மில்டன். இந்நிலையில், விரைவில் ஒரு பிரமாண்டமான ரயில் சண்டை காட்சிக்காக ராஜஸ்தான் பறக்கிறது படக்குழு. 

இருப்பினும், படத்தை ஒக்டோபர் 21ஆம் திகதி வெளியிடவுள்ளதாக அறிவித்து விட்டார் திரைப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். 

திரைப்படம் வெளியாகும் நாள் நெருங்கிக்கொண்டிருப்பதால், ஏதேனும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ஓகஸ்ட் 15ஆம் திகதி  திரைப்படத்திக் டீசரை வெளியிடவுள்ளனர்.

இதே நாளில் விஜய்யின் புலி திரைப்படத்தின் டிரைலரும், சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் திரைப்படத்தின் தலைப்பும் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விக்ரம் திரைப்பட டீசரும் வெளியாகயிருப்பதால் அஜீத்-விஜய் ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள பரபரப்பு வளையத்துக்குள் இப்போது விக்ரமும் வந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .