2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

அனிருத்தின் GOD FATHER

George   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் எனது கோட்பாதர் என கோலிவூட்டின் இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் கூறியுள்ளார்.

2011ஆம் ஆண்டு ஐஸ்வர்யா தனுஷின் இயக்கத்தில் 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்; தொடர்ந்து, தனுஷின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு மட்டுமேஇசையமைத்து வந்தார்.

இதனிடையே, கடந்த ஆண்டு, விஜய் நடித்த கத்தி, சிவகார்த்திகேயனின் மான் கராத்தே  ஆகிய திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம், முன்னணி இசையமைப்பாளரானார்.

தற்போது, வீரம் சிவா இயக்கத்தில் தல 56 திரைப்படத்துக்கு இசையமைத்து வரும் அனிருத்தின் இசை மற்றும் அவரது ஸ்டைல், அஜீத்துக்கு மிகவும் பிடித்து விட்டதால், தல 57 திரைப்படத்துக்கும் அனிருத்தே இசையமைக்க உள்ளதாக தகவல்; வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், பற்றி அனிருத்திடம் கேட்டபோது, 'ரஜினிகாந்த் எனது உறவினர் மட்டுமல்லாது எனது கோட்பாதரும் அவரே. என்னுடைய ஒவ்வொரு இசை வெளியீட்டுக்கு பிறகும்,அது குறித்து என்னுடன் கருத்துகளை பகிர்ந்துகொள்வார். 

அவரது கருத்துக்கள், என் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றன. நான் அஜித் சாரின் மிகப்பெரிய ரசிகன். அவரது திரைப்படங்களை முதல் காட்சியே பார்த்து விடுவேன். திரைப்படம் பார்க்கும் போதே, விசிலடிப்பது, காகிதங்களை எறிவது போன்ற செயல்களை செய்தவன் தான் நான்' என்கிறார் அனி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .