2021 மே 08, சனிக்கிழமை

ஓர் ஆவியின் காதல்

George   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகவா லோரன்சுடன் நடித்த காஞ்சனா திரைப்படத்துக்குப் பிறகு மங்காத்தா, வனயுத்தம், ஒன்பதுல குரு, இரும்புக்குதிரை, அரண்மனை ஆகிய திரைப்படங்களில் நடித்தார் ராய்லட்சுமி. 

இதில் அவர் ஷோலோ ஹீரோயினாக நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால் மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து நின்றார். ஆனால் தற்போது ஸ்ரீகாந்துடன் நடிக்கும் சவுகார்பேட்டை, லோரன்சுடன் நடிக்கயிருக்கும் மொட்ட சிவா கெட்டசிவா ஆகிய திரைப்படங்களால் மீண்டும் ராய்லட்சுமியின் மார்க்கெட்டில் பரபரப்பு கூட்டியுள்ளன.

இதில், தற்போது ஸ்ரீகாந்துடன் நடித்து வரும் சவுகார்பேட்டை திரைப்படத்தில் மிரட்டலான பேயாக நடிக்கிறார் ராய்லட்சுமி. கதைப்படி, இறந்து போன ஒரு பெண்ணின் காதல் வலியை சொல்லும் உணர்ச்சிபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்படி அவர் நடிக்கும் காட்சிகளில் அவருக்கு உறுதுணையாக காதல் தோல்வியில் இறந்த மேலும் பல பேய்களும் நடித்துள்ளதாம்.

இதுபற்றி ராய்லட்சுமி கூறுகையில், இதற்கு முன்பு நான் எத்தனையோ மாறுபட்ட கேரக்டர்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இறந்து போன பிறகும் ஒரு ஆத்மா தனது காதல் வலியை வெளிப்படுத்தும் அந்த வேடம் என்னை ரொம்பவே பாதித்து விட்டது. அதோடு, ஒரு பாடல் காட்சியில் ஆவேசமாக ஆடியிருக்கிறேன்.

தலைவிரி கோலத்தில் நான் ஆடிய அந்த பாடல் திரைப்படம் பார்ப்பவர்களை குலைநடுங்க வைக்கும் பயங்கர அலறல் சத்தத்துடன் படமாக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் நடித்த எனக்கேகூட அந்த காட்சியை திரையில் பார்த்தால் பயம் தொற்றிக்கொள்ளும் என்கிறார் ராய்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X