Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரசன்னா - சிநேகா தம்பதிகளுக்கு சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்து ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிரசன்னா - சிநேகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. திருமணத்துக்கு பிறகு சினேகா, சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும், ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஒரு வருடகாலமாக சினேகா, எந்தவித படப்பிடிப்பிலும் சினி விழாக்களிலும் கலந்துகொள்ளவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதால் அவர் எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை என்று கூறப்பட்டது.
பிரசன்னா - சிநேகா தம்பதியருக்கு திங்கட்கிழமை(10) இரவு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். பிரசவத்துக்கு பிறகு தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago