2025 மே 17, சனிக்கிழமை

பெயர்மாற்றிய கவர்ச்சி நடிகை

George   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெயர்மாற்றிய கவர்ச்சி நடிகை

முதன்முதலாய், மின்சாரம், சிறுவாணி ஆகிய திரைப்படங்களில் நடித்த ஐஸ்வர்யா, தனது பெயரை நந்தினிஸ்ரீ என்று மாற்றியுள்ளார்.

தான் நடித்த முதல் மூன்று திரைப்படங்களுமே ஓடாததால் அந்த திரைப்படங்களில் நடித்திருப்பதை சொன்னால் தன்னை ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டி விடுவார்கள் என்று புதிதாக சந்திக்கும் நபர்களிடம், தன்னை புதுமுக நடிகை போன்றே காட்டிக்கொள்கிறாராம்.

மதுரையில் ஒதுங்கிய வைகைப்புயல்

வடிவேலு கதாநாயகனாக நடித்த இரண்டு திரைப்படங்களுமே காலியாகி விட்டதால் இன்னும் இவரை கதாநாயகனாக மீண்டும் நடிக்க வைத்து நஷ்டப்பட வேண்டியதில்லை என்று அவரைத்தேடி சென்ற தயாரிப்பாளர்கள் ஓடிவந்து விட்டனர்.
இனிமேல் எனக்கு சினிமாவில் நடித்துதான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. நான் போதும் போதும் என்கிற அளவுக்கு சம்பாதித்து விட்டேன் என்று சொல்லிக்கொண்டு இப்போது மதுரைக்கு தனது முகாமை மாற்றி விட்டாராம் வைகைப்புயல் வடிவேலு.

செப்டம்பரில் சீறும் சிங்கம் 3

சூர்யாவை வைத்து ஆறு என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கிய ஹரி, அந்த திரைப்படத்தில் சூர்யாவின் திறமையை பார்த்து வேல், சிங்கம், சிங்கம் 2 ஆகிய திரைப்படங்களிலும் நடிக்க வைத்தார்.
அத்துடன் விடாமல் இன்னுமொருபடி மேலேபோய் இப்போது சிங்கம்-3 திரைப்படத்தையும் இயக்கவிருக்கிறார். மாஸ் திரைப்படத்தை அடுத்து 24 திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த மாதத்தோடு அதில் நடித்து முடித்து விடுவாராம். அதனால் செப்டம்பரில் இருந்து தனது சிங்கம்-3 திரைப்படத்தை தொடங்குகிறார் ஹரி.

கலங்காத சித்தார்த்

அடுத்தடுத்த நடித்த திரைப்படங்கள் பெரியளவில் ஓடாததால் எந்தவித பெரிய எதிர்பார்ப்புகளும் இல்லாமல் சுந்தர்.சியின் அரண்மனை இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். எனினும், பல நாட்களில் சித்தார்த்தை படபிடிப்புதளத்தில் உட்கார வைத்துக் கொண்டே த்ரிஷா-ஹன்சிகாவின் காட்சிகளையே எடுத்துக்கொண்டிருக்கிறாராம் சுந்தர்.சி., எப்போதாவதுதான் சித்தார்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கின்றாராம்;. இருந்தாலும் கலங்காத சித்தார்த், கேரவனுக்குள்ளேயே அடைந்து கிடப்பதை தவிர்த்து விட்டு, த்ரிஷா-ஹன்சிகா நடிப்பதை வேடிக்கை பார்த்து டைம் பாஸ் பண்ணுகிறாராம்.

இனியாவின் காந்தாரி

மாசாணி திரைப்படம் சறுக்கியதால் விட்ட இடத்தை பிடிக்கமுடியாமல் தவித்த வாகை சூடவா இனியாவை மீண்டும் தாம் இயக்கவுள்ள புதிய திரைப்படமான காந்தாரியிலும் இனியாவையே நடிக்கவைக்க முடிவுசெய்துள்ளனர்இயக்குநர்களான பத்மராஜ்-எல்ஜிஆர் ஆகியோர்.

திரில்லர் கதையில் உருவான மாசாணியில் இனியாதான் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். இருந்தாலும் அந்த திரைப்படம்; பெரிதாக ஓடவில்லை. இந்தநிலையில், காந்தாரி திரைப்படமும் கதாநாயகியை மையப்படுத்தும் கதை என்பதால், தங்களது முதல் திரைப்படத்தில் நடித்த இனியாவையே நடிக்க வைக்கலாம் என இயக்குநர்கள் முடிவெடுத்துள்ளனர்.

நடிப்புக்கு ழுழுக்கு

தன்னை தேடிவரும் திரைப்படங்களை திருப்பி விட்டு வரும் சந்தியா, என் உடம்பு வெயிட் போட்டுக்கொண்டே இருக்கிறது. என்னால் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப் போகிறேன் என்று கூறுகிறாராம்.
அதோடு, ஏற்கனவே சென்னை, கேரளாவில் பல இடங்களில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் காதல் சந்தியா, திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு பியூட்டி பார்லரில் முழுக்கவனம் செலுத்தப்போகிறாராம்.

பானுவுக்கு டும்..டும்..

நடிகர் விஷாலின் 'தாமிரபரணி' திரைப்படம் மூலம் புகழ்பெற்ற நடிகை பாணு மலையாள பின்னணி பாடகி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமிளை காதலித்து வந்தார.; இது பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் இருவீட்டாரிடமும் பேசி திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். எதிர்வரும் 23ஆம் திகதி கொச்சியில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. 30ஆம் திகதி எடப்பள்ளி ஆலயத்தில் திருமணம் நடைபெறும் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .