2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நயனின் திருமணத்தை நடத்திவைப்பேன்: சிம்பு அதிரடி

George   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது முன்னாள் காதலியான நயன்தாராவின் திருமணத்தை நான் நடத்திவைப்பேன என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். நீண்ட தடைகளை கடந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து, முட்டி மோதி ஒருவழியாக அண்மையில் திரைக்கு வந்த வாலு திரைப்படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சி கலந்துகொண்ட போது அவர் அதனை கூறியுள்ளார்.

"இப்போதெல்லாம் ஆன்மீக ஈடுபாடு காரணமாக நிறைய பக்குவப்பட்டு விட்டேன். என் திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். அதையும் கடவுளே முடிவு செய்வார். தனியாக நான் வாழவேண்டுமா? திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? என்பது கடவுள் கையில் இருக்கிறது.

காதலில் நான் நிறைய அடிபட்டு விட்டேன். நயன்தாராவும், நானும் எதிர்மறையான சிந்தனையோடு பிரியவில்லை. ஒரு சூழ்நிலை காரணமாக சேர்ந்து இருக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எனவே பிரிந்துவிட்டோம். கோபித்துக்கொண்டு விலகவில்லை. அதனால் தான் மீண்டும் சேர்ந்து நடிக்கிறோம்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிக்கிறார்களா? என்று கேட்கிறார்கள் அவர்கள் காதலிப்பதாக இதுவரை சொல்லவில்லை. இதேபோல் தான் பிரபுதேவாவை நயன்தாரா காதலிக்கிறாரே? என்று கேட்டார்கள்.

நான் நடக்கும்போது கேளுங்கள் என்று பதிலளித்தேன். அது நடந்ததா?. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் எனக்கு நண்பர்கள். அவர்கள் காதலித்தால் சந்தோஷம் தான். அவர்களுடைய திருமணத்தையும் நானே நடத்தி வைப்பேன்" என்றார் சிம்பு.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X