2025 மே 17, சனிக்கிழமை

நயனுடன் நடிக்க ஆசை

George   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவர் மீது இருவர் சாய்ந்து, பனிவிழும் மலர்வனம், வாராயோ வெண்ணிலாவே போன்ற திரைப்படங்களில் நடித்தவர்தான் நடிகை சானியதாரா.

தற்போது மெய்மறந்தேன், கடை எண் 6 ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் சானியாதாரா, நயன்தாராவின் தீவிர ரசிகையாம்.

"எனதுஉண்மையான பெயர் சானியா சேத். சினிமாவில் எனக்கு நயன்தாராவை ரொம்ப பிடிக்கும், அதனால் எனது பெயரோடு தாராவையும் இணைந்து கொண்டு சானியாதாரா என்று மாற்றிக் கொண்டேன்.

எனக்கு எல்லாவிதமான கேரக்டரில் நடிக்கும் ஆசை உள்ளது. குறிப்பாக பேய் திரைப்படங்களில் நடிக்க அதிக ஆசை உள்ளது. நான், நயன்தாராவின் தீவிர ரசிகை என்பதால், எதிர்காலத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்"என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .