2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மறுபடியும் போக்கிரி கூட்டணி

George   / 2015 ஓகஸ்ட் 20 , பி.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநரும் நடிகருமான பிரபுதேவாவின் திரைப்படத்தில் நடிகர் விஜய் மீண்டும் நடக்கவுள்ளார்.

தமிழில் விஜய் நடித்த போக்கிரி, வில்லு ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபுதேவா, அதையடுத்து எங்கேயும் காதல், வெடி ஆகிய திரைப்படங்களையும் இயக்கினார். பின்னர் ஹிந்திக்கு சென்றவர் அங்கு 100 கோடி வசூல் சாதனை திரைப்படங்களாக கொடுத்து குறிப்பிடத்தக்க ஐந்து இயக்குநர்களில் தானும் ஒருவராக இடம்பிடித்தார்.

அதனால் அங்குள்ள முன்னணி ஹீரோக்களே பிரபுதேவா திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினர். இருந்தாலும் சல்மான்கான் நடிப்பில் வோண்டட், அக்சய்குமார் நடிப்பில் ரவுடி ரத்தோர், கிரிஷ்குமார் நடிப்பில் ராமைய்யா வாஸ்தவாய்யா என வரிசையாக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவருக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எக்சன் ஜெக்சன் திரைப்படம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது.

அதனால், அதுவரை தென்னிந்தியா பக்கமே திரும்பிப்பார்க்காமல் இருந்து வந்த பிரபுதேவா, மெல்ல தெற்கு நோக்கி வரத் தொடங்கினார். அதன் முதல்கட்டமாக தற்போது பிரபுதேவா ஸ்டுடியோ என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் மூன்று திரைப்படங்களை தயாரித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், மீண்டும் தமிழில் திரைப்படம் இயக்கும் ஆசையும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர் மீள் பிரவேசத்தில் மீண்டும் விஜய்யை வைத்தே தனது முதல் திரைப்படத்தை இயக்க ஆசைப்படுகிறாராம்.

இந்த தகவலை அவர் விஜய்யிடத்தில் தெரிவித்தபோது, தற்போது அட்லி இயக்கத்தில் நடிக்கிறேன். அடுத்தபடியாக எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் குஷி-2வில் நடிக்கிறேன். அதையடுத்து நடிக்க இன்னும் கதை முடிவு பண்ணவில்லை. அதனால் நீங்கள் ரெடி பண்ணுங்கள். உங்கள் திரைப்படத்திலேயே நடிக்கிறேன் என்று கூறி விட்டாராம்.

அதனால், அந்த திரைப்படத்தை தனது பிரபுதேவா ஸ்டுடியோ மூலமே தயாரித்து இயக்க திட்டமிட்டுள்ள பிரபுதேவா, அந்த திரைப்படத்தில் பொலிவூட்டின் பிரபல நடிகை ஒருவரை நடிக்க வைக்கவும் முடிவு செய்துள்ளாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .