2025 மே 17, சனிக்கிழமை

தளபதி வழியில் தல?

George   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைய தளபதி விஜயை தொடர்ந்து தல அஜீத்தும் சரித்திர திரைப்படமொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியுள்ளது.

சிவாஜி காலத்துக்கு பிறகு சரித்திர பின்னணியில் திரைப்படங்கள் வருவது குறைந்து விட்டது. அவ்வப்போது ஓரிரு திரைப்படங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. ஆனால், எப்படி பழைய ஹீரோக்களின் பாணிக்கு இப்போதைய ஹீரோக்கள் மாறி வருகிறார்களோ அதேபோல் பழைய சரித்திர கதைகளை திரைப்படமாக்குவதில் இப்போதைய இயக்குநர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதற்கு முதல் பிள்ளையார் சுழி போட்டது பாகுபலி, ருத்ரமா தேவி திரைப்படங்கள்தான். அந்த திரைப்படங்கள் உருவாகிக்கொண்டிருந்தபோதே, விஜய்யிடம் புலி திரைப்படத்தின் கதையை சொன்னார் சிம்புதேவன். ஏற்கனவே வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற சரித்திர ஹிட் திரைப்படத்தை அவர் இயக்கியவர் என்பதால், விஜய்க்கும் அவர் சொன்ன புலி சரித்திர திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

அதனால், 500 வருடங்களுக்கு பின்னோக்கி சென்று சித்ர குள்ளன் கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்று அவர் சொன்ன யுக்தி தன்னை வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பமாக நினைத்த விஜய், அந்த திரைப்படத்தில் அதிக ஈடுபாடு காட்டி நடித்தார். இப்போது புலி தஜரைப்படத்தின் டீசர், டிரெய்லர் என அனைத்தும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறன.

இந்நிலையில், நடிகர்; அஜீத்தையும் சரித்திர கதையில் நடிக்குமாறு அவரது அபிமானிகள் கேட்டுக்கொண்டு வருகின்றனர். அதோடு அவரை ஏற்கனவே இயக்கிய இரண்டொரு இயக்குநர்கள் அவரிடம் சரித்திர நாவல்களை திரைப்படமாக்குவது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். அதனால், இதற்கு முன்பு ஷாரூக்கான் நடித்த அசோகா திரைப்படத்தில் மட்டுமே சரித்திர கதையில் நடித்திருக்கும் அஜீத்தின் அடுத்த திரைப்படம் சரித்திர கதையில் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .