Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை அனுஷ்கா, தான் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே ஓடிப் போக நினைத்தார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும்; இது நடந்தது இப்போதல்ல சில வருடங்களுக்கு முன்னர்.
அனுஷ்கா நாயகியாக அறிமுகமான சூப்பர்; திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஒரு காட்சியில் நடிக்க அனுஷ்கா நிறைய தடவைகள் ரீ-டேக் வாங்கினாராம். நடனம் ஆட கொஞ்சம் கூட வராதாம். திரைப்படத்தின் இயக்குநர் பூரி ஜெகன்னாத்தும், நாயகன் நாகார்ஜூனாவும் அதைக் கண்டு கோபப்படாமல் பொறுமையாக இருப்பார்களாம்.
ஒரு கட்டத்தில் அனுஷ்காவுக்கு கண்களில் கண்ணீரே வந்து விட்டதாம். அதோடு படப்பிடிப்பை விட்டு ஓடிப் போகலாம் என்றும் முடிவு செய்தாராம். ஆனால், நாகார்ஜூனாதான் அனுஷ்காவுக்கு தைரியமூட்டி, ஆதரவாக இருந்து தொடர்ந்து நடிக்கக் காரணமாக இருந்தாராம்.
அனுஷ்காவே அந்த சம்பவத்தைப் பற்றி அண்மையில் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். அன்று மட்டும் சினிமாவே வேண்டாம் என்று அனுஷ்கா ஓடிப் போயிருந்தால் இன்று தமிழ், தெலுங்குத் திரையுலகம் ஒரு அழகான, திறமையான நடிகையை இழந்திருக்கும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் அனுஷ்கா நடித்து அவருடைய திறமையை மேலும் வெளிப்படுத்தி வருகிறார். அனுஷ்கா நடித்துள்ள ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாகவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago