2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

21 ஆண்டுகளுக்கு பின் ஜோதிகாவின் ரீஎண்ட்ரி

J.A. George   / 2022 நவம்பர் 22 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தெலுங்கு திரைப்படம் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பின்னர் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகியிருந்தார். பின்னர் ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி ஆனார்.

இந்த நிலையில் 21 ஆண்டுகள் கழித்து நடிகை ஜோதிகா இந்தி திரையுலகில் ரீ என்ட்ரி ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு ’லிட்டில் ஜான்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்த ஜோதிகா அதன்பின் 21 ஆண்டுகள் கழித்து தற்போது ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நாயகியாக ஜோதிகாவை நடிக்க படக்குழுவினர் அணுகியதாகவும், அதற்கு ஜோதிகா சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா கேரக்டரில் ராஜ்குமார் ராவ் என்பவர் நடிக்கிறார். துஷார் இத்ராணி என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .