Freelancer / 2024 ஒக்டோபர் 11 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் 'தக்லைப்' படத்தில் நடித்து வந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தியன் 3ஆம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
இந்த நிலையில், அடுத்து பிரபல சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு சகோதரர்கள் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார்.
இந்த படம் குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையிலும் பட வேலைகள் தொடங்காமல் இருந்தன.
இந்த நிலையில், கமல்ஹாசன் நடிக்கும் 237ஆவது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சண்டை பயிற்சி இயக்குனர்கள் இயக்குவதால் இது முழுநீள அதிரடி சண்டை படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்க கமல்ஹாசன் கடும் உடற்பயிற்சிகள் செய்து முழுமையாக தன்னை தயார்படுத்தி வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. (AN)
4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025