2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

40 வருடங்களின் பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைகின்றனர்

R.Tharaniya   / 2025 நவம்பர் 06 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் ரஜினி - சுந்தர். சி கூட்டணியில் உருவாகும் திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ், நெல்சன் என இளம் இயக்குநர்களுடன் பணியாற்றிய ரஜினி மீண்டும் மூத்த இயக்குநரான சுந்தர்.சியுடன் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், திரைத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநராக இருக்கும் சுந்தர். சி இன்றும் வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார். இறுதியாக, இவர் இயக்கிய வெளியான மத கஜ ராஜா மற்றும் அரண்மனை - 4 ஆகிய படங்களில் வசூலில் சக்கைபோடு போட்டன.

தற்போது, முக்குத்தி அம்மன் - 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், ரஜினியுடன் சுந்தர்.சி இணைந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இறுதியாக, கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் திரைப்படத்தை ரஜினிக்காக சுந்தர்.சி இயக்கியிருந்தார்.

<span style="color: rgb(49, 49, 64); font-family: " noto="" sans="" tamil",="" -apple-system,="" blinkmacsystemfont,="" "segoe="" ui",="" roboto,="" oxygen,="" ubuntu,="" cantarell,="" "fira="" sans",="" "droid="" "helvetica="" neue",="" sans-serif;="" font-size:="" 12px;"="">அதன்பின், 28 ஆண்டுகள் கழித்து இக்கூட்டணி இணைந்துள்ளதால் இப்படம் பேய்ப்படமாக இருக்குமா இல்லை சுந்தர்.சி பாணி நகைச்சுவைப் படமாக இருக்குமா என்பதில் ரசிகர்களுக்கு ஆர்வம் எழுந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X