Mithuna / 2023 டிசெம்பர் 10 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரெடின் கிங்ஸ்லி சமீப காலமாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பஞ்சம் அதிகரித்து வருகிறது. ஒரு வேலை அப்படியே ஓர் அளவிற்கு பெரிய நகைச்சுவை நடிகர் என்ற பெயர் வந்ததும் ஹீரோவாக நடிக்க செல்கிறார்கள்.

டாக்டர் திரைப்படத்தின் மூலம் பிரபலமான ரெடின் கிங்ஸ்லி தற்பொழுது அடுக்கடுக்காக நிறைய தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். பார்க்க அப்பாவியாக இருக்கும் ரெடின் கிங்ஸ்லியை பார்த்தாலே சிரிப்பு வரும். அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். 46 வயதான இவர் ஞாயிற்றுக்கிழமை (10) பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

சங்கீதா சன் டிவியில் திருமகள் மற்றும் அனந்த ராகம் போன்ற நிறைய சீரியலில் நடித்து உள்ளார். மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு தோழியாகவும் நடித்து உள்ளார். இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி சங்கீதா தம்பதிக்கு திரையுலகினர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
14 minute ago
21 minute ago
34 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
34 minute ago
43 minute ago