Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூர்யாவின் படங்களுக்கு இப்பொழுது எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. வித்தியாசமான தனது நடிப்பினால் அனைவரது மனங்களையும் கொள்ளைகொண்ட நடிகர் சூர்யா என்றால் அது மிகையாகாது.
அந்தவகையில் முருகதாஸின் இயக்கத்தில் உருவாகிவரும் '7ஆம் அறிவு' படத்திற்கு இப்பொழுதே எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். இதுவும் கஜினி போன்ற 'சைக்கோ' படம்தான். படத்தின் தலைப்பே இதனை பறைசாற்றுகிறது.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஹரிஸ் ஜெயராஜ். ஆறு வருடங்களின் பின்னர் முருகதாஸ் - சூர்யா - ஹரிஸ் ஜெயராஜ் கூட்டணி இணைந்திருக்கிறது. ஆகையினால் இப்படத்தின் பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
'7ஆம் அறிவு' படத்தினுடைய பாடல்கள் மே மாதம் இறுதிப்பகுதியில் அல்லது ஜூன் மாதத்தின் முற்பகுதியில் வெளிவருமென அறியவருகிறது. இப்படத்தினுடைய எடிட்டிங் வேலைகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன. இவ்வேலைகள் முடிவடைந்ததும் ஜூலை மாதத்தில் '7ஆம் அறிவு' திரைக்கு வருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
kalaichelvan Wednesday, 01 June 2011 07:08 PM
இப்போது நீங்கள் மட்டும்தான் நல்லா நடிக்கிறீங்கள். அசத்துங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025