Freelancer / 2023 டிசெம்பர் 29 , பி.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது 71. விஜயகாந்த்தின் இல்லம், தேமுதிக., அலுவலகம் மற்றும் தீவுத்திடலில் வைக்கப்பட்ட அவரது உடலு்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், சினிமா நட்சத்திரங்களும் அஞ்சலி செலுத்தினர். லட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக., தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
வழிநெடுகிலும் தொண்டர்களும், ரசிகர்களும் வெள்ளம்போல் அவருக்கு மரியாதை செலுத்தினர். கோயம்பேடில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை செய்தனர். சந்தனபேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், புதுச்சேரி முதல்வர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இறுதி சடங்கில் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையிலும், அலுவலகம் முன்பு கூடியிருந்த கூட்டத்தினர் கண்ணீர் மல்க விஜயகாந்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.
வானத்தை போல மனம் படைத்த விஜயகாந்த் தேடி வந்தவர்களின் பசியை போக்கி, ஏழை மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்த இந்த சொக்க தங்கத்திற்கு நிச்சயம் சொர்க்கத்தில் இடம் இருக்கும். அப்படியே மக்கள் மனதிலும் நிலைத்து நிற்பார்.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025