Editorial / 2025 ஜூன் 29 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

(மாநிலங்களவை தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதியை சந்தித்த கமல்ஹாசன்)
98ஆவது ஆஸ்கர் விருதுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும் குழுவில் இந்திய நடிகரும், தமிழ் நடிகருமான கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சர்வதேச அளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும்.
அதன் படி 98 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2026ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான திரைப்படங்கள், கலைஞர்களை தேர்வு செய்வதற்கான குழுவில் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரை பிரபலங்கள், திரை கலைஞர்கள், திரை வல்லுநர்கள் இடம் பெறுகின்றனர். அதன்படி 98 ஆவது ஆஸ்கர் விருதுக்கான தேர்வு குழுவில் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்கர் அமைப்பு அறிவித்துள்ளது.
இதன் மூலம் 534 பேர் கொண்ட ஆஸ்கர் தேர்வு குழுவில் கமல்ஹாசனும் இடம் பெறுகிறார். ஆஸ்கர் தேர்வு குழு அழைப்பு விடுத்துள்ள 534 பேரும் குழுவில் பங்கேற்க சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், ஆஸ்கர் தேர்வு குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 11,120 ஆக உயரும். அதிலும் குறிப்பாக வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 10, 143 ஆக உயரும் என்று ஆஸ்கர் அமைப்பு தெரிவித்துள்ளது.
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago