Freelancer / 2023 ஏப்ரல் 03 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபலங்கள் பலரும் சமூகவலைத்தளங்கள் மூலம் தனது ரசிகர்களோடு எப்போதும் ஒரு தொடர்போடே இருந்து வருகின்றனர். அடிக்கடி போட்டோக்கள், விடீயோக்கள் அப்லோட் செய்து தங்களது இருப்பை காட்டி கொள்வார்கள். படமே நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே பிரபலமாக அறியப்படும் பலரும் கூட உள்ளனர்.
ஆனால், உச்ச நட்சத்திரங்கள் பலரும் அதற்கு விதிவிலக்கு என்றே சொல்லலாம் நடிகர் விஜய் இவர் ட்விட்டர் போன்ற தளங்களில் வைத்திருந்தாலும் அதை அவரின் அட்மின்கள் தான் கையாள்வதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஒன்றை நடிகர் விஜய் ஆரம்பித்துள்ளார். அதை ஆரம்பிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அவரை பின்தொடர ஆரம்பித்து விட்டனர். இதே போல, விஜய் ஆரம்பித்த அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் அவரை போலவே சில உச்ச சாதனைகளையும் கூட படைத்துள்ளது
Actor vijay என்று துவங்கப்பட்டுள்ள விஜய் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தற்போது 4 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகமான பின்தொடர்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் உலக அளவில் BTS மற்றும் ஏஞ்சலினா ஜோலிக்கு அடுத்த இடத்தில் ஆரம்பித்த ஒரு மணிநேரத்திலேயே அதிக நபர்களால் பின்தொடரப்பட்டவர் என்ற சாதனையை படைத்துள்ளார் விஜய்.

9 minute ago
21 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
28 minute ago