2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

“99 சாங்ஸ்”என்ன சொல்கிறது?

Editorial   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறு வயதிலிருந்தே இசையை உயிருக்கு உயிராக நேசிக்கும் இளம் பாடகரான நாயகன், பணக்கார பெண்ணைக் காதலிக்கின்றான். இந்த காதலை பெண்ணின் தந்தை விரும்பாத நிலையில், “நீ 100 பாடல்களை இசையமைத்துக்கொண்டு வா..உனக்கு என் மகளைத் திருமணம் செய்து வைக்கிறேன்” என உத்தரவிடுவதாக ஆரம்பமாகிறது விஸ்வேஷ் கிருஸ்ணமூர்த்தி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகி வரும் “99 சாங்ஸ்” திரைப்படம்.

இதில் கதாநாயகனாக தழித் திரைக்கு புதியவர்களான எஹன் பாட்,மற்றும் கதாநாயகியாக எட்ல்சி என்பவரும் நடிக்கின்றனர்.

காதலியின் தந்தையுடைய நிபந்தனையை ஏற்றுக்கொண்டு இசைப்பயணத்தை ஆரம்பிக்கும் நாயகனுக்கு,  நண்பரொருவர்  விளையாட்டாக  போதை மருந்தை செலுத்துகிறார். இறுதியில் போதையில் காரை செலுத்தும் நடிகன் விபத்துக்குள்ளாகிறார்.

விபத்தையடுத்து கதாநாயகன் போதையில் காரை செலுத்தியமை கண்டறியப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றான்.

இறுதியில் கதாநாயகன் காதலியின் தந்தையுடைய சபதத்தில் ஜெயித்து காதலியை கரம் பிடிக்கின்றாரா? இல்லையா என்பதே மீதிக் கதையாக அமைந்துள்ளது.

இசைக்கு உயிரூட்டி வந்த இசைப்புயலுக்கு திரைப் படக் கதையும் நன்றாக வரும் என்பதற்கு  இப்படம் உதாரணமாக ​அமையவுள்ளதுடன், இசைப்புயலின் முதல் முயற்சி ரசிகர்கள் மன்தை எத்தனை தூரத்துக்குக் கட்டி போடும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .