Freelancer / 2024 ஓகஸ்ட் 04 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

சித்தார்த் கதாநாயகனாக தயாரித்து நடித்த ‘சித்தா’ திரைப்படத் 7 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளது.
‘சித்தா’ திரைப்படம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற நிலையில், பிற மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட சித்தார்த்துக்கு சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸாக சித்தா படம் அமைந்தது.
இந்த படம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து பேசியதும், அதனை ஆணாதிக்க மனப்பான்மையில் எதிர்கொள்ளும் கதாநாயகனுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையைப் பற்றி கதாநாயகி எடுத்துரைப்பதும் படத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றது.
பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்ற சித்தா திரைப்படம் இப்போது பிலிம்பேர் விருதுகள் நிகழ்வில் 7 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (விமர்சகர்கள்), சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த பின்னணி பாடகி மற்றும் சிறந்த இசை ஆல்பம் ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.S
2 hours ago
8 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
16 Jan 2026