2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’அங்காடி தெரு’ நடிகை மரணம்!

J.A. George   / 2023 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ’அங்காடி தெரு’திரைப்படத்தில் நடித்த நடிகை சிந்து மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

‘அங்காடி தெரு’, ‘நாடோடிகள்’ உள்பட ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகை சிந்து. இவர் கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை மிகவும் கடினமாக இருப்பதாக அவர் தனது நெருக்கமானவர்களிடம் கூறியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி அவர் தனது வளசரவாக்கம் இல்லத்தில் காலமானார். இந்த தகவல் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X