J.A. George / 2021 நவம்பர் 02 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் ‘கற்றது தமிழ்’திரைப்படம் மூலம் அறிமுகமான அஞ்சலி, இதையடுத்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
அண்மை காலமாக தமிழில் திரைப்பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் தெலுங்கில் அவர் நடித்த ‘வக்கீல் சாப்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஞ்சலி, அடுத்ததாக மேலும் ஒரு புதிய தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘நயாட்டு’ என்கிற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் அஞ்சலி ஹீரோயினாக நடிக்க உள்ளார். கருணா குமார் இயக்க உள்ளார்.
தெலுங்கில் பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள பிரியதர்ஷி என்பவர் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க உள்ளாராம்.
12 minute ago
39 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
39 minute ago
1 hours ago
6 hours ago