2025 மே 14, புதன்கிழமை

அடுத்த வராம் முதல் ‘அச்சம் என்பது மடமையடா’

George   / 2016 நவம்பர் 01 , மு.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பு நடிப்பில் ​கௌதம் மேனன் இயக்கிய “அச்சம் என்பது மடமையடா” திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.   

நவம்பர் மாதம் 11 அல்லது 18ஆம் திகதி, “அச்சம் என்பது மடமையடா” திரையிடப்படலாம் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில், இந்தத் திரைப்படம் நவம்பர் 11ஆம் திகதி திரையிடப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

இதேவேளை, இது குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.   

சிம்பு, மஞ்சிமா மோகன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X